யாழில் லொறி மீது மோதிய லொறி!


 யாழில் திடீரென வீதியின் குறுக்கே ஓடிய மாட்டினால் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிரே வந்த மற்றொரு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கொடிகாமம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி திடீரென வீதியின் குறுக்காக ஓடிய மாட்டுடன் மோதுவதை தவிர்ப்பதற்காக சாரதி முயற்சித்தபோதும் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிரே பயணித்த மற்றொரு லொறியுடன் மோதியதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் படுகாயமடைந்த லொறி சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.