கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மூடப்படுகிறது!


 கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கடை ஒன்றில் பணிபுரிந்த ஒருவருக்கு இன்று (23) கொரோனா தொற்று உறுதியானதால் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக நேற்று (22) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குறித்த நபருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.