கல்முனையில் இதுவரை 32 பேருக்கு தொற்று!


 அம்பாறை – கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் சகல பொதுச்சந்தைகள் மற்றும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இன்று (26) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்றில் 31 பேருக்கும், சாய்ந்தமருதில் ஒருவருக்குமாக 32 பேருக்கு தொற்று உறுதியானது என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.