மட்டக்களப்பு பொதுசந்தையில் 47 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை (28) மட்டக்களப்பு பொதுசந்தையில் 47 பேருக்கு எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொதுசந்தை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொதுச் சந்தையில் வெளிமாவட்ட வியாபாரிகளுடன் நேரடி தொடர்புடைய வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு அரசடி தாமரைக்கேணி கோட்டமுனை உப்போடை ஆகிய பொதுச்சுகாதார பிரிவுகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனை முடிவுகளின் படி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 47 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை