கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்ட 4 கர்ப்பிணிப் பெண்கள்!

 


கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்காக மேலும் நான்கு மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று குடும்ப சுகாதார பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

அதன்படி, ஹோமாகம, தெல்தெனிய, மினுவாங்கொட மற்றும் காத்தான்குடி மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரசவம் செய்யவிருக்கும் தாய்மார்கள் மற்றும் பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் தங்களது பகுதியில் உள்ள குடும்ப சுகாதார சேவை அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளையும் சேவைகளையும் பெற வேண்டும்.

அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் பிரசவத்திற்காக மகப்பேறு மருத்துவமனைகளுக்குச் செல்ல பயப்பட வேண்டாம், தெளிவான மனதுடன் மருத்துவமனைக்கு வருமாறு சுகாதார பணியகம் அறிவுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.