இன்று 510 பேருக்கு தொற்று!


 கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (08) இதுவரை 510 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10,447 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 13,929 ஆகும்.

இதேவேளை மொத்தமாக 8,285 பேர் குணமடைந்துள்ளதுடன், 2ம் அலையில் தொற்றுக்கு உள்ளானோரில் 4,299 பேர் குணமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.