அகவை 66 இல் எம் தங்கத் தலைவன்!!

 


சூரியப் புதல்வன் 

சோதியாய் வந்த நாள். 

தானைத் தலைவன் 

தரணியில் உதித்த நாள்.

இன மானம் காக்க 

எம் தலைவன் பிறந்த நாள்......


உன் பெயர் சொன்னாலே 

ஓங்கி வீரம் ஒலிக்குதண்ணா.....

தமிழன்னை  உதட்டினிலே 

புன்னகையும் பூக்குதண்ணா.....


கருவறைக்குள்ளேயும் 

கனல் கக்கி நிற்கிறதே....

உன் பெயர் கேட்டதுமே 

உயிர் மூச்சு துடிக்கிறதே.. 


ஓயாது ஓயாது 

உலகிலே உன் நாமம்...

சாயாது சாயாது

அவனியில் தமிழ் மானம்...


வேங்கை வீரம் 

வென்றிடும் ஒரு நாள்...

இதோ...இதோ...

வீரத்தமிழினம்

விண்ணேகும் திருநாள் ...

விடியும் விடியும் 

விரைவில்.....


தமிழரசி

தமிழருள் இணையம், 





Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





 







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.