68 வருடங்கள் பழமையான ஐம்பொன் சிலைகள் யாழில் மீட்பு!

 


யாழ்ப்பாணம் , குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்ட 68 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் நேற்று மீட்கப்பட்டன.

வட்டுக்கோட்டை - சங்கானை ஓடக் கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்திலிருந்தே இந்த சிலைகள் மீட்கப்பட்டன.

முருகன் விக்கிரகம், 3 மயில்கள்கலசம் ஆகியன அடங்கிய ஐம்பொன் சிலைகளே இவ்வாறு மீட்கப்பட்டன. இந்த சிலைகள் உருவாக்கப்பட்ட காலத்தில் தங்கம் அதிகளவு சேர்க்கப்பட்டது.

இதனால், தற்போதைய காலத்தில் அந்த சிலையின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடிரூபாவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த சிலைகள் நீண்ட காலத்துக்குமுன்னரே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.மீட்கப்பட்ட சிலைகள் மானிப்பாய்பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்தச் சிலைகளை இந்தியாவுக்கு கடத்தும் நோக்குடன் குளத்துக்குள் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.