அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பற்றி வெளியான செய்தி


அமெரிக்காவில் 2021ஆம் ஆண்டில் அதிபராவதற்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடனின் அரசில் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார் கமலா ஹாரிஸ்.

இதன் மூலம் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வான முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாகிறார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.

இந்நிலையிதான் கமலா ஹாரிஸ்ஸிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொடர்பிருப்பதாகவும் கமலா ஹாரிஸ்ஸின் தாயின் தாய் யாழ்பாணமெனவும் தந்தை கொழும்பு, எனவும் மட்டக்களப்பு எனவும், கமலா ஹாரிஸ் யாழ்ப்பாண வம்சாவளி பெண்ணென இஸ்ரத்திற்கு செய்தி வெளியிட்டு வந்தன சில ஊடகங்கள்.

இந்நிலையில் கமலா ஹாரிஸ்ஸின் தாயான ஷியாமிளா அவர்களின் சகோதரரான பாலச்சந்திரன் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது பூர்விகம் தமிழ்நாடே இலங்கைக்கும் எமக்கும் எந்தவித தொடர்புமில்லை, எங்களது பெற்றோர் தமிழகம் திருவாரூர் மாவட்டம், அங்கேதான் எமது தாத்தா, பாட்டியும் இருந்தார்கள், என்று தெரிவித்துள்ள அவர் இதனைவிட எமக்கு வேறெந்த பகுதியுடனும் பூர்விகத் தொடர்புகள் கிடையாது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.