முதல் பெண் துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ்!
தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முதல் ஆப்ரிக்க-அமெரிக்க பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்தது. ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் பல மாகாணங்களில் இழுபறி நீடித்து வந்தது.
இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டி வந்தாலும், ஜோ பைடன் பல மாகாணங்களில் முன்னிலை வகித்து வந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அங்குள்ள 538 தேர்தல் வாக்குகளில், அதிபட்சமாக 270 வாக்குகளைப் பெற வேண்டும்.
இதில் டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இதன் மூலம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் ஆப்ரிக்க-அமெரிக்க பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸ் கடந்த் 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தார். இவரது தாய் சியாமளா கோபாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். கமலா ஹாரிஸின் தந்தை டொனால்டு ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர்.
கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர் ஆவார். அவரது தந்தை பொருளாதார பேராசிரியராக பணியாற்றினார்.
கமலா ஹாரிஸின் பெற்றோர் 1972 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதன் பின்னர் கமலா ஹாரிஸ் தனது தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார்.
கமலா ஹாரிஸ் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். நான்கு வருட ஹாவார்ட் பல்கலைக்கழக படிப்புக்கு பின் கமலா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அதன் பிறகு அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார். அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார்.
இதன் மூலம் கலிஃபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை