தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் மீது சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை

 


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தீபாவளி தினத்திற்கு முதல் நாள் பயணிகளை ஏற்றி சென்றதற்காக யாழ்ப்பாணம் - பருத்துறை 750 வழி சாலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றமை தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கண்டறியப்பட்டு வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியினால் இந்த நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார நடைமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றதையடுத்த அந்த பேருந்துக்கான வழித்தட அனுமதிப்பத்திரமும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள

இரண்டாம் எச்சரிக்கை நிலையின் கீழ் பேருந்தின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். அத்தோடு பயணிகள் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாத நிலையில்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தப்பட்டு வழித்தட அனுமதியும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.