மினுவாங்கொடை கொரோனா கொத்தணி - விசாரணை சி.ஐ.டி வசம்


மினுவாங்கொடை கொரோனா கொத்தணி தொடர்பில் விசாரிக்க குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை நியமித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் துணை ஆணையாளரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விசாரணை முன்னெட்க்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.