தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு


வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி க. ஹரிப்பிரசாத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 9ஆம் திகதி வருகை தந்த நிலையில் குறித்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் தயாராருடன் வசித்து வந்த நிலையில் தாயார் நேற்று(செவ்வாய்கிழமை) உடல்நலக்குறைவு காரணமாக மரணித்துள்ளார்.

இந்நிலையில் மரண விசாரணையின் போது குறித்த பெண் மற்றும் அவரது பிள்ளைகள் தனிமைபப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் வவுனியா வைத்தியசாலைக்கு கடந்த 12 ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குறித்த பெண் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மரணித்தமைக்கான காரணத்தினை அறிந்துகொள்வதற்காக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அவரது உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோனைக்கு அனுப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது இரு பிள்ளைகளுக்கும் மரணித்தவரின் பேரனுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.

எனினும் இறந்த பெண்ணின் சடலம் உடனடியாக தகனம் செய்யப்பட்டுள்ளதுடன் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.