குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்திய பெற்றோர்!


இந்தியப் பெற்றோர், தங்களது குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பவர்களாக  இருக்கிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 55 சதவீத பெண்களும், 43 சதவீத ஆண்களும், தங்களது குழந்தைகளின் கல்விக்காகவே பெரும் தொகையை செலவிடுவதாகவும், ஆண்களை விட, அதிகளவிலான பெண்களே குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் டிஜிட்டல் சொத்து மேலாண்மை சேவை அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நகர்ப் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பெற்றோர்களின் அதிக முக்கியத்துவம் கொண்டதாக கல்வியே விளங்குவதாகவும், அவசரத் தேவைக்கு பணம் சேமிப்பது குறுகிய கால இலட்சியமாக விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியர்கள் முதல் செலவை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகிறார்கள். அடுத்ததாக ஓய்வூதியத்துக்காக, உடல் நலனுக்காக, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு என செலவை மேற்கொள்கிறார்கள்.

25 வயது முதல் 55 வயது வரையுடையவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆண்களும் பெண்களும் சம அளவில் பங்கேற்றுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.