விசேட பிரார்த்தனையில் ஈடுபடும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்!

 


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிரிஸவெடிய புண்ணிய பூமியில் நாட்டு மக்கள் அனைவருக்கும், ஆசி வேண்டி 500 மகா சங்கத்தினர் பங்கேற்ற பிரித் பாராயண நிகழ்வொன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

உலக வாழ் அனைத்து மக்களும் முகம்கொடுத்துள்ள கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபடுவதற்கு ஆசிர்வாதம் வேண்டியும், ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டும், பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டும் இந்த வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சியம் நிகாயவின் மல்வத்தை பிரிவின் வட மத்திய மாகாண தலைமை சங்கநாயக்கர் அடமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறிநிவாச நாயக்க தேரரின் ஆலோசனையின் பேரில், மிரிஸவெடிய, சைத்தியாதிகாரி சங்கைக்குரிய ஈதலவெடுனு வெவே ஞானதிலக தேரரின் நெறிப்படுத்தலில், மல்வத்தை பிரிவின் அநுனாயக தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதர்ம நாயக்க தேரரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த 500 மகா சங்கத்தினர் பங்குபற்றினர்.

இதன்போது பிரதமரும் ஜனாதிபதியும் இதன்போது துட்டகைமுனு மன்னரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

பிரித் பாராயணத்தை தொடர்ந்து மல்வத்தை, அஸ்கிரிய அநுனாயக தேரர்கள், அடமஸ்தானாதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினர் பிரதமர் அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் நினைவுச்சின்னங்களை வழங்கிவைத்தனர்.

மகா சங்கத்தினருக்கு பூஜைப்பொருட்களை ஜனாதிபதியும், பிரதமரும் வழங்கிவைத்ததுடன், தேசிய, சமய மற்றும் சமூக பணிகளுக்காக மகா சங்கத்தினருக்கு இதன்போது வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றினர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.