அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் வேண்டுகோள்!


அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று, சட்டப் பேரவைத் தோ்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

சட்டப் பேரவைத் தோ்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை நேற்று வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதன்போது தகவல் தொழில்நுட்ப அணியைப் பலப்படுத்துவது, அரசின் சாதனைகளை வீடு வீடாக மக்களிடம் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் வாக்குச் சாவடி முகவர்களை நியமிப்பது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கண்ணும் கருத்துமாக மேற்கொள்வது, தகவல் தொழில்நுட்ப அணிக்கான பிரதிநிதிகளை வட்ட அளவு வரை நியமிப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டத்தில் பேசிய முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளையும், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டால் விளைந்த நன்மைகளையும் பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.