மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை!!
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதுவரை எண்ணப்பட்ட வாக்கு நிலைவரங்களின் அடிப்படையில் பாஜக 19 இடங்களிலும் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
28 சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வென்றாலே பா.ஜ.க தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தற்போது மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் பா.ஜ.கவுக்கு 107 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 87 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 230 இடங்களில் ஒரு இடம் காலியாகி 229 ஆக உள்ளதால் பெரும்பான்மைக்கு 115 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய பிரதேச இடைத்தோ்தலில் 16 முதல் 18 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை