ஆமதாபாத்தில் நடைமுறையிலுள்ள இரவு நேர பொதுமுடக்கம் நீடிப்பு!


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆமதாபாத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  இரவு நேர பொதுமுடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு  9 மணி முதல் காலை 6 மணிவரை பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என  மாநில அரசு அறிவித்திருந்தது.

குறித்த பொதுமுடக்கம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.  இதனையடுத்து பொதுமுடக்கம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் மக்கள் பொது சாலைகள்,  வீதிகள் அல்லது பொது இடங்களில்  பொதுமக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்த்து கொள்ளுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.