டெல்லியில் காற்று மாசுப்பாடு மேலும் அதிகரிப்பு!!
டெல்லியில் வார இறுதி நாட்களில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) 426-ஆக பதிவானது.
மேலும் காற்றின் தரம் வரும் நாட்களில் மேம்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாகவும், என்று காற்று தரத்தை கணிக்கும் சஃபா் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தரக்கண்ட் ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை 3 ஆயிரத்து 780 பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
காற்று மாசு கடுமையான பிரிவில் இருந்தால் உடல் நலத்துடன் இருப்பவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் உடல்நலக் கோளாறுகள் இருப்பவா்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை