ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது!
ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8 மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர், உதய்பூர், பில்வாரா, நாகோரே, பாலி, தோன்க், சிகார் மற்றும் கங்காநகர் உள்ளிட்ட நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் போது சமூக அரசியல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை