மூடப்பட்டது யாழ்ப்பாண விமான நிலையம்!


கடந்த ஆட்சியில் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஆரம்பித்தபோது விமான நிலையத்திற்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் கடந்த 17 ஆம் திகதியுடன் முழுமையாக மத்தள விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்த பல உபகரணங்களும் கட்டுநாயக்காவிற்கும் மத்தளவிற்கும் நகர்த்தப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதன் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நிரந்தர மூடு விழா வைக்கப்படுகின்றது.

இதனை மேலும் உறுதி செய்வதுபோல் கொரோனாவிற்காக மட்டுமே மூடியிருப்பின் பலாலி விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசு 300 கோடி ரூபாவை வழங்க தயாரகவே உள்ளது.

இந்தநிலையில் விமான சேவை இடம் பெறாத காலத்தில் பணியை இலகுவாக ஆரம்பிக்க முடியும். எனினும் இலங்கை அதிகாரிகளோ இப் பணியை மேற்கொள்ள பின்னடிப்பதன் மூலம் விமான நிலையத்தை நிரந்தரமாக மூட அவர்கள் முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நேரத்தில்கூட தமிழ் மக்களின் வாக்கில் தேர்வாகி அரசிற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு செல்லும் வீதியாக மாற்றப்பட்ட கட்டுவன்- மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் வீதி இராணுவ, விமான படையினர் வசம் உள்ளதுடன் இன்றுவரை குறித்த வீதி விடுவிக்கப்படவில்லை.

அத்துடன் அந்த வீதியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். இதனால் RDA இனால் வீதி பெயர்கள் சுட்டி காட்டும் board கூட விமான நிலையத்திற்கு செல்லும் வீதியை மூடி மறைத்துவைத்துள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.