யாழ்ப்பாணத்தின் தீவு ஒன்றில் ஏற்பட்டுள்ள அபாயம்!!
யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் ஒன்றான காரைநகரில் அண்மைக்காலமாக தீவிரமான கடலரிப்புக்கு உள்ளாவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் அதற்கான தீர்வினை பெறாவிடின் குறித்த பகுதி கடலில் கலந்துவிடும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த அனர்த்தம் காரைநகர் வியாவில் பகுதியிலேயே நிகழ்ந்துவருகின்றது.
அங்குள்ள பெருமளவு நிலம் கடந்த பத்தாண்டுகளில் கடலினுள் விழுங்கப்பட்டிருக்கிறதாகவும் கரையோரத்தில் வாழும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பல வருடங்களிற்கு முன்னர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டுத் தடுப்பணை உருவாக்குவதாக உறுதியளித்து சென்ற நிலையில், அதன் பின்னர் எதுவுமே இடம்பெறவில்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ள மக்கள், கடற்கரைகளில் கண்டல் தாவரங்களின் பெருக்கத்தினை ஊக்குவிப்பதன் மூலமே இவ்வாறான இடர்களுக்கு தீர்வு காணமுடியும் என்றும் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை