யாழ்ப்பாணத்தில் ஐம்பொன் சிலைகள் மீட்பு!!

 


யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை, ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் அந்த இடத்துக்கு  சென்ற அவர்கள், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்துள்ளனர்.

அதாவது, சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன் , 3 மயில்கள்,  கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே இவ்வாறு மீட்கப்பட்டன.

அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய் வரும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீண்டகாலத்துக்கு முன்பு அவை புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், மீட்கப்பட்ட சிலைகள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்தச் சிலைகளை இந்தியாவுக்கு கடத்தும் நோக்குடன் குளத்துக்குள் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.