ஜோ பைடன் எடுத்துள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவான முடிவு!
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பெண்ணை முக்கிய பதவிக்கு நியமிக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் முடிவெடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அவை வெளியிட்டுள்ளதாவது,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் மாற்றங்களுக்கான சபைக்கு ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சுசன் ரைஸ் நியமிக்கப்பட உள்ளார்.
சுசன் ரைஸ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானர் எனவும் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் முன்னெடுத்த போரை நிறுத்த முயற்சித்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் யோசனையை கொண்டு திட்டமிட்டவர் எனவும் சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை சுசன் ரைஸ் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர் ஆவார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 2021 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார். இதனையடுத்து சுசன் ரைஸ் குறித்த மாற்றங்களுக்கான சபைக்கு நியமிக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் எதிர்வரும் 2021 ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்ற பின்னர் இந்த நியமனங்கள் உடன் நடைமுறைக்கு வரும் என அந்த ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை