கண்டி- திகனயில் நில அதிர்வு!


கண்டி- திகன, அம்பகோட்டை பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு  உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.45 அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உணரப்பட்டுள்ள நில அதிர்வு ரிக்கட் 2இற்கும் குறைவானதே பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கண்டி மாவட்டத்திற்குள் கடந்த இரு மாதங்களில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் ஆராய்ச்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழு,  இந்த நில அதிர்வு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அநுர வல்பொல கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.