முடக்கப்பட்டது கிளிநொச்சியின் இரண்டு பகுதிகள்!!

 


கொரோனா அச்சம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் உறுதிப்படுத்தினார்.

குறித்த பகுதியில் நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளி தனிமைப்படுத்தலை மீறி சுற்றித் திரிந்தமை அம்பலமானமையை அடுத்தே இந்தப் பகுதிகள் நேற்று முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் பணியாற்றும் ஜெயபுரத்தை சேர்ந்த குறித்த நபர் கடந்த 25 ஆம் திகதி சொந்த இடத்திற்கு திரும்பியிருந்த நிலையில், அவரை சுயதனிமைப்படுத்தியதுடன், அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் , அவரிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடத்திய ஆய்வில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அவர் ஜெயபுரத்தின் வடக்கு, தெற்கு பிரதேசங்களில் நடமாடியமை தெரிய வந்ததை அடுத்தே குறித்த பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.