கொரோனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய 15 பேர் தனிமைப்படுத்தலில்!!
முல்லைத்தீவில் நேற்றைய தினம் இனம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 15 பேர் முதற்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மாவட்ட நிலவரம் தொடர்பாக இன்று மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் இருவர் கொரோனா தொற்றாளர்களாக முதன் முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் எமது மாவட்டத்தில் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்கி வந்தன. அந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் வேறு மாவட்டங்களிலிருந்து கொரோன தொற்றுடையவர்களுடன் பழகியவர்கள் என சந்தேகத்துக்கிடமானவர்கள் எடுத்துவரப்பட்டு அவர்கள் அங்கு இருக்கின்ற போது அவர்களுக்கு பி சிஆர் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு அங்கு தொற்று இனம் காணப்படுகின்ற போது,
அங்கிருந்து அவர்கள் வேறு மாவட்டங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் நாங்கள் அதற்குரிய போக்குவரத்து சேவைகளை வழங்கி வந்தோம்.
இதன்போது எமது மாவட்டத்திழும் சில கொரோனா கொத்தணிகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றது சிலரை தனிமைப்படுத்தி வைத்திருந்தோம்.
அத்தகைய சந்தர்ப்பத்தில் நாங்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு தனிமைப்படுத்தி வைத்திருந்தவர்களிடம் பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம்.
அவ்வாறு பரிசோதனை செய்தவர்களில் இருந்து நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் செய்து கொண்ட பரிசோதனை முடிவின்படி எமது மாவட்டத்தில் தனிமைப்படுத்தி இருந்த இருவர் தொற்றுடையவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
எனினும் எமது மாவட்டத்தைப் பொறுத்தளவில் நாங்கள் முன்கூட்டியே அவர்களுக்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட இருவரே தொற்றுடையவராக இனம்காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த 19ஆம் திகதியிலும் 21 ஆம் திகதிலும் கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று வந்திருக்கின்றனர்.
அந்தவகையில் 21 ஆம் திகதி திரும்புகிற போது பேலியாகொடை மீன்சந்தையில் கொரோனா கொத்தணி இனம்காணப்பட்ட நிலையில் அந்த செய்தியை நாங்கள் அறிந்து அவர்கள் இங்கு வர முன்னரே எமது அதிகாரிகளின் வினைத்திறனான சேவை ஊடாக அவர்களை தொடர்புகொண்டு அவர்கள் மாவட்டத்துக்கு வருகை தந்தவுடன் அவர்களை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் தனிமைப்படுத்தி இருந்தனர். அவ்வாறு தனிமைப்படுத்தியவர்களில் வாகன சாரதிக்கு தொற்று இனம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த நபருடன் 19 ஆம் திகதி உதவியாளராகச் சென்ற ஒரு 25 வயது நிரம்பிய நபருக்கும் இந்த கொரோனா தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
ஆயினும் அடுத்த முறை (21ம் திகதி) வாகனத்தின் உதவியாளராக சென்ற அவருடைய தந்தையாருக்கு தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு மீண்டும் பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை உள்ளது.
இதே நேரத்தில் இவர்களுடன் சம்மந்தப்பட்ட அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த இருவர் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பி சி ஆர் பரிசோதனைகளும் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை