பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!

 


மேல்மாகாணத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை(04) முதல் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரத்மலானை, நாரஹென்பிட்டி,, போகுந்தர ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பொருளாதார மத்திய நிலையங்களில் சில்லறை வரத்தக நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும், மொத்த விற்பனையாளர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.