இரண்டு திமிங்கிலங்கள் உயிரிழந்தன!


பாணந்துறை கடலில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கிலங்களுள் இரண்டு திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த திமிங்கலங்கள் மீது பிரேத பரிசோதனை நடத்தப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையைச் சேர்ந்த மாலுமிகள் மீனவர்கள், கிராம வாசிகள் மற்றும் தனியார் அமைப்பு உள்ளிட்ட உள்ளூர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து இன்று அதிகாலையில் குறைந்தது நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் திருப்பி கொண்டுசென்று விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.