ரவைப்பணியாரம் - சமையல்

 


தேவையான பொருட்கள்:


1. ரவை – 2 கப்

2. கனிந்த வாழைப்பழம் – 2 எண்ணம்

3. முந்திரிக் குருணை – 1/4 கப்

4. ஏலக்காய்த் தூள் – 1/4 தேக்கரண்டி

5. உப்பு – சிறிதளவு

6. நாட்டுச் சர்க்கரை – 1கப் (வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளலாம்)

7. எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1. ரவையை சுத்தம் செய்து 1/2மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

2. ஊறவைத்த ரவை, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு முந்திரிப்பருப்பை சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கலக்கிய மாவை குழிக் கரண்டி கொண்டு எடுத்து மெதுவாக ஊற்றவும்.

5. மாவின் அடிப்பாகம் சிவந்தவுடன் மேல் பக்கத்தை திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
Blogger இயக்குவது.