சித்தர்களால் காயகற்பம் என்று அழைக்கப்பட்டது எது?
குமரி ” என்று சித்தர்களால் கூறப்படும் காய கற்ப கற்றாழை மூலிகை, தாவர வகையில் ஒன்றாகும். நமது உடலினை இளமையாக்க உதவி செய்வதாகவும் சித்தர்கள் தெரிவிக்கின்றனர். இயல்பாகவே கற்றாழையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது.
கற்றாழையில் உள்ள வைட்டமின் சத்துக்களால் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. நமது உடலில் தங்கியுள்ள நஞ்சுகளை வெளியேற்றி, நமது உடலின் செல்களை உயிர்ப்புடன் பாதுகாத்து வருகிறது. இதனை முறையாக உண்டு வந்தால் முதுமை தோன்றாமல் இளமையுடன் இருக்கலாம்.
சிவப்பு நிறத்தில் உள்ள கற்றாழையை தோல் சீவி சதையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை நீரில் அலசி நன்றாக கழுவிவிட்டு, திரிகடுகு தூளில் சேர்த்து உண்டு வந்தால் அதுவே சித்தர்கள் கூறிய காயகற்பம் ஆகும். இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த காய கற்பத்தை 48 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை