இலங்கையில் மற்றுமொரு பெரும் முதலீட்டை செய்யவுள்ள சீனா!!
கொழும்பு துறைமுக நகரில் மேலும் ஒருபில்லியன் முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹொங்கொங்கை தளமாக கொண்டு இயங்கும் ஐ.எப்.சி. எனப்படும் சர்வதேச நிதி மையம் (international financial centre)இந்த நிதி முதலீட்டைச் செய்யவுள்ளது.
தற்போது சர்வதேச நிதி மையத்தின் முதலீடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்காக காணப்படுகின்ற சட்டவாக்க வரைவுகளை இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை அடுத்து இம்மாத இறுதிக்குள் பாராளுமன்றில் அதற்கான அங்கீகாரம் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு பாராளுமன்றம் அங்கீகாரம் பெறப்பட்டவுடன் சர்வதேச நிதி மையம் தனது முதலீடுகளை 2021 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கவுள்ளது.
இந்த முதலீடுகள் துறைமுக நகரத்தின் ஒட்டுமொத்த திட்டங்களினதும் முன்னோடித் திட்டத்திற்கானதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு துறைமுக நகரத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதோடு இதன் புதிய முகாமைத்திட்ட பணிப்பாளராக ராஜா எதிரிசூரிய கடந்த முதலாம் திகதி நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை