மேலும் 88 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!


மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 88 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை அவர்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு ராச்சியம் சென்றிருந்த 29 இலங்கையர்கள் உட்பட கட்டாரில் இருந்து 59 இலங்கையரகள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பி சி ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.