பிரதிப்பொலிஸ் மா அதிபர் கலவரம் நடந்த சிறைச்சாலைக்கு விஜயம்!!

 


கலவரம் நடந்த மஹர சிறைச்சாலைக்கு மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட கைகலப்பில் கைதிகள் அறுவர் உயிரிழந்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 35 காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்,தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.