நிவாரணம் பெற வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!
கொரோனா கால நிவாரணமாக அரசு வழங்கும் ரூ .5000 கொடுப்பனவு பெற வரிசையில் காத்திருந்த ஒரு பெண் மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கந்தானையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தபோது, காதிரானாவில் வசிக்கும் 62 வயதான பாதிக்கப்பட்டவர் கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துமாறு நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை