அனுமதியின்றி மாத்திரைகளை வைத்திருந்தவருக்கு அபாரதம்!
திருகோணமலை – மூன்றாம் கட்டை பகுதியில் அனுமதியின்றி ஆயிரத்து 10 மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்ட நபருக்கு 75,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த எட்டாம் மாதம் மூன்றாம் திகதி தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் பெறாமல் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் மருந்தகம் ஒன்றினை நடத்தி வருபவர் எனவும், குறித்த மருந்துகளை கொண்டு செல்லும்போது அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து கைதான சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு 75,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
மேலும் , சந்தேகநபர் தண்டப்பணம் செலுத்தத்தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை பிரதம நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை