25 வருடங்களாக பல கோடி மோசடி செய்த பிரபல தொலைக்காட்சி!


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியான சன் டிவியுடன் 1995 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தலைவராக கே.ஆர்.ஜி. இருந்தபோது சன் டிவியுடன் போடப்பட ஒப்பந்தப்படி, ஒரு வாரத்திற்கு 6 பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு சன்டிவி சார்பில் ஒரு லட்சம் தர வேண்டும். அதே பாடல் இரண்டாம் முறை ஒளிபரப்பாகும்போது 6 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அதற்குப் பிறகு எத்தனை முறை ஒளிபரப்பினாலும் 2 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சன்டிவியைத் தவிர வேறு எந்த சேனலுக்கும் பாடல்கள் கொடுக்கக் கூடாது என்றும், தூதர்ஷனுக்கு வேண்டுமானால் கொடுக்கலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். எனினும் அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல், பாடல்களை சன் டிவி ஒளிபரப்பி வந்துள்ளது.

இதனால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சன் டிவி சார்பில் பல கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் 100 கோடி ரூபாயாவது கிடைத்திருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார்.

இத்தனை ஆண்டுகளாக காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட அந்த ஒப்பந்தத்தை போராடி மீட்டெடுத்திருப்பதாக அவர் கூறுகிறார். இது குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஒப்பந்த பத்திரத்தின் நகலையும் வெளியிட்டுள்ளார்.

ஆடியோவில், தனியார் தொலைக்காட்சியிடம் தயாரிப்பாளர் சங்கம் போட்டிருந்த ஒப்பந்தம் காணாமல் போய்விட்டதாக, களவாடப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டு வந்தது. ஒப்பந்த பத்திரம் கிடைக்காததால், நமது சங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 25 வருடங்களாக தனியார் சேனல் அனைத்து பட பாடல்களையும் ஒளிபரப்பி வருவதாகவும், அதனால் 25 வருடத்திற்கு மிகப் பெரிய தொகை வரவேண்டியிருக்கிறது. இத்தனை வருடங்களாக இவ்வளவு கோடி வரவேண்டியிருப்பதை சம்பந்தப்பட்ட சேனல்கிட்ட பழைய நிர்வாகிகள் பேசியிருந்தால், அந்த பணம் கிடைத்திருக்கும். சங்கத்திற்கு வழி பிறந்திருக்கும்.

ஒப்பந்த பத்திரத்தை மீட்க, மூத்த நிர்வாகிகள் செய்யாதது ஏன் என்று கேள்வி கேட்கும் சதீஷ்குமார், திரைத்துறையின் முக்கிய புள்ளியிடம் இருந்து அசல் ஒப்பந்த பத்திரம் மீட்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து தயாரிப்பாளர்களும் சேர்ந்து அந்த சேனலிடம் பேசினால் நமக்கான உரிமை உடனே கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர்களுக்கும் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.