வவுனியாவில் அடியவர்களை இருத்தி பிரதமருக்கு வழிபட செய்த ஆலயக்குருக்களும் நிர்வாகத்தினரும்


 வவுனியாவில் கந்த சஷ்டி வழிபாட்டுக்கு வந்த அடியவர்களை இருத்தி பிரதமருக்கு ஆசி வேண்டி வழிபட செய்த ஆலயக்குருக்களும் நிர்வாகத்தினரும்


 தமிழ் மக்களை பொறுத்த வரையில் இந்த மாதம் சைவமக்களின் புனித விரத நாட்களாகவும் தமிழ் மக்களுக்காக போராடிய புனிதர்களின் நாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மகிந்தவின் ஆட்சியிலே தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள்..


 தமிழர்களின் போராட்டமும் அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் இன்று சிலர் தங்களின் சுய நலன்களுக்காவும் விளம்பரங்களுக்காவும் தமிழ் மக்களின் தியாகங்களையும் சைவ மக்களின் விரத விழாக்களையும் கேவலப்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் வவுனியாவில் இவ்வாறான செயற்பாடுகளை ஆலய நிர்வாகங்களும் குருமார் என்ற போர்வையில் சிலரும் செயற்பட்டு வருகின்றனர். 


வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் கந்த சஷ்டி வழிபாட்டுக்கு வந்த அடியவர்களை இருத்தி பிரதமர் மகிந்தவின் பிறந்த தினத்திற்கு பிராத்திக்குமாறு அடியவர்களை வற்புறுத்தியுள்ளார் ஆலயக்குருக்கள்.


 அது மட்டுமல்லாது பிரதமர் சகல செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என சிறப்பு உரையும் நிகழ்த்தியுள்ளார் ஆலயக்குருக்கள். ஆலயத்திற்கு கந்த சஷ்டி வழிபாட்டுக்கு வந்த அடியவர்கள் இத்தகைய செயலுக்கு விசனம் தெரிவித்திருந்தனர்.


பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடுபவர்கள் தாராளமாக கொண்டாடலாம் ஆனால் கந்த சஷ்டி வழிபாட்டுக்கு வந்த அடியவர்களின் விரதங்களை குழப்பி இவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும் என கவலையோடு தெரிவித்தனர் இந்நிகழ்வினை திவாகரக்குருக்கள் இந்து கலாசார உத்தியோகத்தர் சர்மா மற்றும் ஆலய பரிபாலன சபையினர் தமிழ் விருட்ஷம் சந்திரகுமார் மேற்கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.