லீக் ஆனது சூர்யாவின் ரகசிய லுக்!

 


சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யா வித்தியாசமான லுக்கில் தோன்ற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது,


இந்த நிலையில் சமீபத்தில் சுதா கொங்காராவின் மகள் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த திருமணத்திற்கு மணிரத்னம், சுஹாசினி, ஜிவி பிரகாஷ் உள்பட பலர் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் சூர்யாவும் கலந்து கொண்டார்.


இந்த திருமணம் குறித்த புகைப்படத்தில் சூர்யா நீளமான முடி வைத்து வித்தியாசமான லுக்கில் இருக்கிறார். இதுவரை பாண்டிராஜ் படத்தில் சூர்யாவின் தோற்றம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திருமண விழாவின் புகைப்படங்களில் இருந்து சூர்யாவின் லுக் லீக் ஆகிவிட்டது. இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.