ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள தேவையில்லாதவர்கள்!!

 


ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபடும் கொள்கலன்கள் மற்றும் ஏற்றுமதி செல்ல பிராணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள தேவையில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்திற் கொண்டு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொருளாதார மத்திய நிலையம் அல்லது விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து அரிசி, மரக்கறி உள்ளிட்ட பொருட்களை மேல் மாகாணத்திற்கு எடுத்து வரும் போது, அதற்கு குறித்த நிலையங்களின் முகாமையாளரினால் வழங்கப்படும் கடிதமொன்றே பொதுமானது. அதனை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.

இதேவேளை , மீன் விநியோகத்திற்காக ஐஸ் கட்டிகளை ஏற்றிச் செல்வதற்கும், ஏற்றுமதி செல்பிராணிகளை விமான நிலையம் அல்லது துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை.

இறைச்சிகள் மற்றும் முட்டைகளை ஏற்றிச் செல்பவர்களும் அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதே போதுமானது. இதற்காக அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை.

அதற்கமைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்களும் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மக்களின் அத்தியாவசிய தேவேகளை கருத்திற் கொண்டே இத்தகைய வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த வசதிகளை ஒருவரும் முறைக்கேடாக பயன்படுத்த கூடாது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கே முதலிடம் வழங்க வேண்டும் என்றார்.

Blogger இயக்குவது.