நான்கு மாதங்களில் கொரோனா முற்றாக ஒழிந்து விடும்!


 இன்னும் நான்கு மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டு விடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்ட பின்னர் தினமும் நத்தார் பண்டிகை இல்லை என்பது போல் எதிர்க்கட்சியினருக்கு இன்னும் சில மாதங்களில் கொரோனா தொற்று நோய் என்ற போராட்ட கோஷமும் இல்லாமல் போய்விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மேலும் மூன்றரை ஆண்டுகள் கொரோனா வைரஸூடன் வாழ நேரிடும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.