புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுப்பு!
உடுவில் – மல்வம் சேமக்காலையில் புதைக்கப்பட்ட சத்தியுபுரத்தை சேர்ந்த (64-வயது) பெண்ணின் சடலம் நேற்று (18) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இவர் செப்டம்பர் 22ம் திகதி மரணித்த நிலையில் யாருக்கும் தெரியாமல் சடலம் புதைக்கப்பட்டது தெரிவிக்கப்படுகிறது. சொத்துப் பாகப்பிரிவினையின் போதே குறித்த பெண் மரணித்தமை தெரிய வந்தது.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை