மாவீரர் நாள் காணியை ஆக்கிரமித்தது இராணுவம்!


 கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் கடைப்பிடித்த காணியில் இராணுவம் திடீரென முகாம் அமைத்து அப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதி இராணுவத்தினரின் நிரந்தர இராணுவ முகாம் உள்ளமையால் அதன் அருகில் உள்ள ஒரு காணியில்,

துயிலும் இல்ல மாதிரி அமைத்து ஆண்டுதோறும் மாவீரர்களை அஞ்சலித்த நிலையில், இந்த ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்,

செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு துப்பரவு செய்யப்பட்ட காணியில் இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் எனக் கருதிய இராணுவத்தினர்,

அந்தக் காணியில் படை முகாம் அமைப்பதோடு முட்கம்பி வேலியும் அமைத்து வருகின்றனர்.

மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெறும் என்பதற்காக இந்தக் காணி அபகரிக்கப்பட்டதா அல்லது நிரந்தரமாகவே ஆக்கிரமிக்கப்பட்டதா என்று அறியமுடியவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.