ட்ரம்ப்பை சுற்றும் அடுத்த பரபரப்பு!
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்ட் ட்ரம்ப் கடுமையான தோல்வியை தழுவினார். ஆனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ட்ரம்ப் வழக்கு, நீதிமன்றம், பரபரப்பு பேட்டி என ஒட்டுமொத்த உலகையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அதைத் தொடர்ந்து தற்போது அவருடைய குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியை தழுவப் போகிறார் என்றொரு தகவலை டெய்லி மெயில் UK எனும் பத்திரிக்கை நேற்று செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
இந்தத் தகவலை ட்ரம்ப்பின் நிர்வாக ஆலோசகராக பொறுப்பு வகித்த உதவியாளர் ஒருவர் கூறியதாக டெய்லி மெயில் தெரிவித்து இருக்கிறது. அதில், ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் தோற்றுவிட்டார். எனவே அவரை விவாகரத்து செய்வதற்கான உரிய நேரத்திற்காக மெலனியா காத்துக் கொண்டிருக்கிறார் என அந்தப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதனால் ட்ரம்ப்பை சுற்றி அடுத்த பரபரப்பு தொற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்பின் குடும்ப வாழ்க்கையைக் குறித்து உறுதிப்படுத்த முடியாத பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ட்ரம்ப்பின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்ட மெலனியாவின் தோழி ஸ்டெபானி வோல்கஃப் கூறும்போது, வெள்ளை மாளிகையில் இருவரின் படுக்கை அறைகளும் தனித்தனியாகவே இருந்தன எனத் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியிருக்கிறார்.
மேலும், அவர்களது திருமணம் ஒரு ஒப்பந்தமாககூட இருக்கலாம் என்று சக ஊழியர் ஓமரோஜா மணிகால்ட் நியூமன் கூறியதாகப் பரபரப்பு தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ட்ரம்ப் –மெலனியா ஜோடி தங்களது திருமண வாழ்க்கையை தொடங்கி 15 வருடங்கள் கழித்து இப்படி ஒரு முடிவை எடுப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இதை நான் முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை என்று மெலனியா ஒருமுறை கண்ணீர் சிந்தியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
50 வயதாகும் மெலனியா, 74 வயதாகும் ட்ரம்ப்புடன் தனது உறவை முறித்துக் கொள்ளப்போகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாக வில்லை. ஆனால் ட்ரம்ப் தனது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸை விட்டு பிரியும் போது அவருடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி மார்லா ட்ரம்ப்பை தொடர்புபடுத்தி எந்த ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட முடியாது. அதேபோல செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளிக்கவும் கூடாது எனக் கூறப்படுகிறது. ஒருவேளை மெலனியா ட்ரம்ப்பை விட்டுப்பிரியும்போது இதேபோன்ற நிலைமை மெலனியாவிற்கு ஏற்படுமா என்ற சந்தேகத்தை பத்திரிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை