மரணிப்போருக்கு குடும்பத்தினரே பொறுப்பு!

 


கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் தங்களது சொந்த செலவில் சவப்பெட்டிகளை வாங்க முடியும் அல்லது அதற்கு உரிய பணம் செலுத்த வேண்டும் என்பதும் சாதாரண நடைமுறை.

இருப்பினும் , ஒரு குடும்பம் சவப்பெட்டிகளை வாங்க அல்லது அதற்கு உரிய பணம் செலுத்த ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால், அரசாங்கம் அதனை பொறுப்பெடுக்கும்” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.