ஐக்கிய மக்கள் சக்தியின் பதவியை துறந்தார் டயானா கமகே!
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தானும் தனது கணவரும் விலகிவிட்டதாகவும் எனினும் கட்சியின் சாதாரண உறுப்பினராக தற்போதும் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளராகவும் அவரது கணவர் சேனக சில்வா பிரதித் தலைவராகவும் பதவி வகித்தனர்.
நேற்று இரவு தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த அவர், 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்ததை அடுத்து கட்சியின் பொறுப்புக்களில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.
அத்துடன் கட்சியின் உரிமை தம்மிடம் இல்லை எனத் தெரிவித்த அவர் கட்சியின் சாதாரண உறுப்பினராக உள்ளதாகத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை