கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை!


 பாணந்துறை, வெக்கட பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட கட்டடத்தில் மின்சாரத்தில் இயங்கும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

கடந்த 16ஆம் திகதி இந்த நிலையம் முற்றுகையிடப்பட்டது.

450 போத்தல் கசிப்பு, 40 பீப்பாய் கோடா, 50 மூடை சீனி உள்ளிட்ட பல பொருட்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன.

பீப்பாய்கள் ஒவ்வொன்றும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு, நவீன கசிப்பு தொழிற்சாலையாக அது அமைந்திருந்தது.

மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் இரண்டாவது தளத்தை நான்கு மாதங்களுக்கு முன்பு 125,000 ரூபா வாடகைக்கு ஆடைத் தொழிற்சாலையை நடத்தப் போவதாக கூறி ஒருவர் பெற்றுள்ளார்.

கசிப்பு நிலையம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து, கட்டிடத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, விசாரித்தபோது, ​​இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறினார்.

கட்டிடத்தின் உரிமையாளர் கீழ் தளத்தில் வியாபார நிலையத்தை நடத்துவதுடன், மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பு பாணந்துறை, மொரட்டுவ, மவுண்ட் லவனியா, பண்டராகம, வதுவ மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.