கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு கடைக்குள் பாய்ந்த கார்!


 புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொண்ட இளைஞர் ஒருவருக்கு ஆக்சிலரேட்டருக்கும் பிரேக்குக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தால், நேரே ஒரு கடைக்குள் பாய்ந்தது அவரது கார்.

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில் காரை கடைக்கு முன் நிறுத்துவதற்கு பிரேக் பிடிப்பதற்கு பதிலாக, அவர் தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்துள்ளார். இதனால் சீறிப்பாய்ந்த கார், கடையின் கண்ணாடிக் கதவை உடைத்துக்கொண்டு கடைக்குள் பாய்ந்துள்ளது.

21 வயதேயான அந்த இளைஞரின் கார் கடைக்குள் பாய்ந்து படிக்கட்டு ஒன்றில் மோதி நின்றுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, அன்று சற்று முன்னர்தான் அந்த கடை வாடிக்கையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தது.

சம்பவம் நடக்கும்போது, கடைக்குள் இரண்டு ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளார்கள். விபத்தைக் கண்ணால் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சிக்காக அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.