பெண் கைதிகள் கூரை மீதேறி போராட்டம்!


 நீர்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நால்வர் இரு கோரிக்கைகளை முன்வைத்து கூரையின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், பிணையில் செல்வதற்கு அனுமதிக்குமாறும் கோரியே எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகின்றது.

இதேவேளை வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும், தம்மை தமது பிள்ளைகளிடம் செல்ல அனுமதிக்குமாறும் கோரி அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கைதிகள் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.