இளைஞரிடம் பண மோசடி செய்த கிளிநொச்சி யுவதி!


 இளைஞன் ஒருவரிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உருத்திரபுரத்தை சேர்ந்த 25 வயதான யுவதியே நேற்று (3) கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

வவுனியா, கந்தபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கட்டாரில் தொழில் புரிந்து வருகிறார். அவரிடம் கடனடிப்படையில் வீடு கட்ட 11,40,000 ரூபாவை யுவதி கடனாக பெற்றுள்ளார். எனினும், அதை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, இளைஞன் தரப்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.